இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதல் த.வெ.க., பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி
கிள்ளை: சிதம்பரம் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில், இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதியதில், த.வெ.க., பிரமுகர்கள் உட்பட மூவர் இறந்தனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மேல்குறியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைமணி மகன் குகன்,24; த.வெ.க., முகாம் செயலாளர். கீழ் குறியாமங்கலத்தை சேர்ந்தவர் கலைராஜன்,47; த.வெ.க. கிளை செயலாளர். எலக்ட்ரீஷியன்களான இருவரும் நேற்று காலை வேலைக்கு பைக்கில் சிதம்பத்திற்கு சென்றனர். அங்கு, வேலை இல்லாததால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காலை 10:00 மணிக்கு சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் மண்டபம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த டி.என்.32–பிஎச்–9013 பதிவெண் கொண்ட மினி டெம்போ, கலையரசன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதிவிட்டு, முன்னாள் சென்ற ேஹாண்டா யூனிகான் பைக் மீது மோதியது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


