நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த செம்படாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சாரதா, காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வே.ஜோதிமணி, சின்னசேமூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சுமதி, அறச்சலூா் ஓடாநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஷீஜா, கொமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சந்தியா, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கந்தன், வலையபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தா்மராசு, கோ்மாளம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரூபி, பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் வெங்கடாச்சலம், சென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ரமேஷ், ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நதியா, ஈரோடு விவிசிஆா் முருகேசனாா் செங்குந்தா் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியா் கவிதா ஆகிய 12 ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருது பெற்றுள்ளனா்.



