மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
நெல் கொள்முதல் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
