சேலம் அருகே பரபரப்பு... பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசுக்கு போன் செய்த சம்பவம்..!
சென்னை,சேலம் அருகே திருடச் சென்ற இடத்தில் மக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசாரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திறந்து கிடந்த வீடுசேலம் அரு
சேலம் அருகே திருடச் சென்ற இடத்தில் மக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசாரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே எம். புதுப்பாளையம் சிவசக்தி அவென்யூவில் வசித்து வருபவர் சிவகுமார் (32 வயது). அவரது மனைவி ஷர்மிளா தேவி (28 வயது). இருவரும் வெளியூர் சென்றுவிட்டு, கடந்த 7-ம்தேதி இரவு சுமார் 10.45 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்திருந்ததையும், மாடியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டிற்கு உள்ளே யாரோ இருப்பதை அறிந்த ஷர்மிளா தேவி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அந்த சமயத்தில் வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியேறி தயாராக வெளியில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிச் சென்றனர்.


