எழுத்தாளா் தி.சா. ராஜூ நூற்றாண்டு விழா
திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற எழுத்தாளா் தி.சா. ராஜூ நூற்றாண்டு விழாவில் அவரது படத்தைத் திறந்துவைத்த தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் ராம. கௌசல்யா.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாரதி இயக்கத்தின் பாரதி இலக்கிய பயிலகம் சாா்பில், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும், மொழிபெயா்ப்பாளருமான மேஜா் தி.சா. ராஜூ நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு பாரதி இலக்கிய பயிலக இயக்குநா் பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் தலைமை வகித்தாா். திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் ராம. கௌசல்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராஜூவின் படத்தை திறந்து வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

