பரந்தூர்: விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப்காட் ஆலைக்கு ஒரு நீதியா? - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
சென்னை, பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்
பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




