'நாணய' டீக்கடைக்காரர்!
ஆவடி திருமுல்லைவாயல் பேருந்து நிறுத்தம் அருகே முப்பத்தொரு ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்தி வருபவர் லோகநாதன். இவர் பழைய நாணயங்கள் சேகரிப்பில் தீவிரமாக இயங்கி, 1980-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாணயங்களைச் சேகரித்துள்ளார். இவரது கடையில் அவற்றைக் காட்சிப்படுத்தியும் உள்ளார்.
'இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:
'சிவகங்கை மாவட்டத்துக்கு உள்ள வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னய்யா - ஆனந்தவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். பிளஸ் 2 வரை படித்தேன். சிறுவயதிலேயே நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் இருந்தது. படித்து முடித்தவுடன் சென்னைக்கு வந்துவிட்டு, ஆவடியில் தேநீர்க் கடையை நடத்தி வருகிறேன்.
