தடகள போட்டியில் காரைக்குடி மாணவர்
காரைக்குடி: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் இளைஞர் இந்தியன் மாமதுரை 2.5 சார்பில் மாநில அளவிலான தட களப் போட்டி நடந்தது.
மதுரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹசீகரன் கலந்து கொண்டார். குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார்.
உத்தரகாண்டில் நடைபெறும் தேசிய அள விலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று உள்ளார்.


