போட்டி தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு
புதுடில்லி: யு.ஜி.சி., நெட், ஜே.இ.இ., மெயின், கியூட் – முதுகலை தேர்வு உள்ளிட்ட 14 போட்டித் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
‘நீட்’ எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., கல்வி நிலையங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் முதல் 2027, மார்ச் வரையிலான 14 போட்டித் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டது.
இதன்படி, இன்ஜினியரிங் சேர்க்கைக்கான ஜே.இ.இ., மெயின் தேர்வின் முதற்கட்டம், 2027, ஜனவரி 22 முதல் 24ம் தேதியும், 28 முதல் 30ம் தேதி வரையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, ஜனவரி 31ம் தேதி, மாற்றுத் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.




