ஜெயிலுக்கு போகத்தான் திருடினேன்- 20 லட்ச ரூபாய் தங்க நகைகளை திருடிக்கொண்டு ஓடிய பெண்; துரத்தி பிடித்த கடைக்காரர்கள்
ஜெய்ப்பூர்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரங்களை திருடிக்கொண்டு ஓடிய பெண்ணை, நகை கடைக்காரரும் பொதுமக்களும் வீதியில் துரத்தி பி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரங்களை திருடிக்கொண்டு ஓடிய பெண்ணை, நகை கடைக்காரரும் பொதுமக்களும் வீதியில் துரத்தி பிடித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர் நிவாரு சாலையில் 'பவானி ஜூவல்லர்ஸ்' என்ற புகழ்பெற்ற நகை கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு நேற்று வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது, நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நகைகளை வாங்குவது போல வாடிக்கையாளராக உள்ளே நுழைந்தார்.
அவர் அங்கிருந்த ஊழியர்களிடம் தனக்கு தங்க மோதிரங்களை காட்டுமாறு கேட்டுள்ளார். ஊழியர்களும் அந்த பெண்ணின் பேச்சை நம்பி, விலை உயர்ந்த தங்க மோதிரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்து அவர் முன்னால் வைத்தனர்.

