மெட்டா தளங்களில் குழந்தைகள் ஆபாச பதிவு விளம்பரங்கள்: மத்திய அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மெட்டா தளங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவுகள்/ விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடா்பாக இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து...
மெட்டா தளங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவுகள்/ விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடா்பாக இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தியாவில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவுகள் கட்டண விளம்பரங்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா வலைதளங்களில் காட்சிப்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டது.
