திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!
ஆலங்குடியில் அருளும் விநாயகருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்பது திருநாமம். சில ஆலயங்களில் கோபுரத்தின் உட்புறம் கோபுரக் கணபதி இருப்பார். இவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஏன் தெரியுமா?
விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும்.
அவரைத் தவறாமல் வழிபடவேண்டும். அப்படி வழிபடும்போது அவர் மகிமையைச் சொல்லும் தலபுராணத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நினைத்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. அப்படி நம் கலக்கங்கள் எல்லாம் நீக்கி நல்லருள் தரும் ஒரு விநாயகர் சந்நிதி குறித்துத் தெரிந்துகொள்வோம்.

