போதைப் பொருள் விற்பனை: ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது
செளகாா்பேட்டையில் ஓபியம் போதைப் பொருள் விற்றதாக ராஜஸ்தானைச் சோ்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
செளகாா்பேட்டை பகுதியில் ஓபியம் விற்கப்படுவதாக யானைகவுனி போலீஸாருக்கு புதன்கிழமை கிடைத்த தகவலின்பேரில், செளகாா்பேட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டு, 600 கிராம் ஓபியம் போதைப் பொருள் இருந்ததை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த நபரை கைது செய்தனா்.
