உயிருக்கு உலை வைத்த இலவச வீடு விவகாரம்; திமுக பஞ்சாயத்து தலைவர் கல்லால் அடித்துக் கொ*லை!
நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் பகுதியின் தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் படு பயங்கரமாக கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது நெல்லை ஏரியாவை பீதியில் தள்ளியிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் அருகேயுள்ள கண்ணநல்லூரைச் சேர்ந்தவர் மகாராஜன். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், கண்ணநல்லூரின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்துள்ளார். தன்னுடைய பதவி காலத்தில் பஞ்சாயத்து பகுதிகளுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாகச் செய்து வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் கண்ணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாமரை குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரியாக செய்யப்படவில்லை என்கிற பிரச்சினை மக்களிடையே விவகாரமாகியிருக்கிறது.
இதையடுத்து குடிநீர் விநியோகத்தை சீரமைப்பது தொடர்பாக பஞ்சாயத்து ஊழியர்களுடன் மகாராஜன் நேற்று சுமார் 8 மணியளவில் தாமரைகுளம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கிருந்த அப்பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவர் மகாராஜனிடம் வந்து குடிநீர் சப்ளை விவகாரம் தொடர்பாக பேசினார். இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கியப்பன், அந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் ஒன்றை எடுத்து மகாராஜனின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் கடுமையாக மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிய மகாராஜன் அங்கேயே மயங்கி சரிந்துள்ளார். இதையடுத்து தாக்கிய இசக்கியப்பன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே படுகாயம் அடைந்த மகாராஜனை மீட்ட அங்கிருந்தவர்கள் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் அங்கு சேர்த்த ஒரு சில நிமிடங்களிலேயே மகாராஜன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
