சச்சினின் உலக சாதனையை தகர்த்த ஜிம்பாப்வே வீரர்… ஆண்கள் ODI கிரிக்கெட்டில் புதிய ரிக்கார்ட்..
2004 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான 40 வயதான பிரெண்டன் டெய்லர், ஜிம்பாப்வே அணியின் மிகச் சிறந்த பேட்டர்களில் ஒருவராக உருவெடுத்தார்
ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor), இந்தியக் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிரெண்டன் டெய்லரின் ஒருநாள் கிரிக்கெட் கெரியர் தற்போது 22 ஆண்டுகள் மற்றும் 148 நாட்களை எட்டியுள்ளது. இதன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் 22 ஆண்டுகள் மற்றும் 91 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.



