வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள பாண்டா கரடிக்கு பிறந்த தின விழா
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஸ்மித்சோனியனின் தேசிய மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் கிங் பாவோ என்று பெயரிடப்பட்ட பெண் பாண்டா கரடி தனது ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, மிருகக்காட்சி சாலையில் கிங் பாவோவின் கூடுகள் அலங்கரிக்கப்பட்டன. திராட்சை, ஆப்பிள் சாறு உள்ளிட்ட பழச்சாறுகளால் செய்யப்பட்ட ஐஸ் கேக், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் ஆப்பிள் போன்றவை பிறந்தநாள் உணவாக வழங்கப்பட்டன.

