அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?
லண்டீன் முதல் வகுப்பு இருக்கையில் அமர வைத்து, டேப்பைப் பயன்படுத்தி அவரது தலை மற்றும் உடல் பகுதி இருக்கையுடன் கட்டி வைத்தனர்.
டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை மாற்றிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
67 வயதான ஆர்தர் லெய்ன் லண்டீன் என்ற பயணி, விமானப் பணியாளர்கள் மற்றும் சக பயணிகளை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும் விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


