தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?
கியாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன| Madhura Kar wins gold; Kia Kunal Banerjee goes viral: Color-based bias
மதுராவுக்கு கிடைக்கும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் விட கியாவுக்கு கிடைத்த பாராட்டுகளும் அங்கீகாரமும் அதிகம்.
சமூக வலைதளங்களில் ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை சாதனைகளைப் படைக்கும்போது, அந்த வெற்றிகள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகின்றன என்பது பல நேரங்களில் அவர்களின் திறமையை மையப்படுத்தியதாக மட்டும் இருப்பதில்லை. மாறாக, அவர்களின் புறத்தோற்றம், நிறம் மற்றும் அழகு சார்ந்தவையாக இருக்கின்றன.
தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக வரலாறு படைத்திருக்கிறார்.

