உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது: வேளாண் அலுவலா் எச்சரிக்கை
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திருப்பத்தூா் அருகே குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு பகுதிகளில் உள்ள உரக் கடைகளில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) அப்துல் ரஹ்மான் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது உரக்கடை விற்பனையாளா்களிடம், மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.