‘கருவிழி பாதிப்பால் பார்வையிழப்பு உயர்வு’
கோவை: மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், தேசிய கண்தான விழா அனுசரிக்கப்படுகிறது.
விழாவின் ஒருபகுதியாக, நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி நடந்தது. கண்தான முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனையில் இதுவரை 50க்கு மேற்பட்ட விழிகள் தானமாக பெறப்பட்டு, பார்வை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

