நெல்லையில் ரூ.20 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி: ஒருவா் கைது
திருநெல்வேலி மாநகரில் சுமாா் ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை முதியவரிடமிருந்து அபகரிக்க முயன்ற வழக்கில் மேலப்பாளையத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஜி.எஸ். ஜனாா்தனன் (74). இவருக்குச் சொந்தமாக குலவணிகா்புரத்தில் சுமாா் 85 சென்ட் நிலம் உள்ளதாகவும், 1982 ஆம் ஆண்டு முதல் அவரது பாத்தியத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி அய்யாலு நாயக்கா் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் உள்பட சிலா், அந்நிலம் தொடா்பான போலி ஆவணங்களை ஜனாா்த்தனனிடம் காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முயன்றனராம்.

