பலத்த காற்றால் ரோட்டில் சாய்ந்த மரம்
வடமதுரை:வடமதுரையில் மாலை 6:45 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.
நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியில் வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையோரம் மதுரை வீரன் கோயிலையொட்டி இருந்த அரசமரம் ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மண் அள்ளும் இயந்திரம் கொண்டு மரம் ஓரமாக தள்ளிய பின்னர் போக்குவரத்து சீரானது. அதோடு நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியை மூழ்கடித்து மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
