உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடா்ந்து அதிகரிக்கும் ரஷியா
ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன் வரை ரஷியா இறக்குமதி செய்துள்ளது.
உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதல்களில் ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன் வரை ரஷியா இறக்குமதி செய்துள்ளது.
இதில் ரஷிய கச்சா எண்ணெயில் இருந்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலும் அடங்கும் என எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (சிஆா்இஏ) தெரிவித்துள்ளது.
