போலீஸ்காரருக்கு 10 ஆண்டு
திருவண்ணாமலை: இளம்பெண்ணை திருமணம் செய்த போலீஸ்காரர் மணிகண்டன், 35, என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டரையை சேர்ந்தவர் மணிகண்டன். போலீஸ்காரராக பணியாற்றினார். இவரது மனைவி விமலா, 28. இவர்களுக்கு, 2018ல் திருமணம் நடந்தது.
இந்நிலையில், 2020ல், 16 வயது இளம்பெண்ணை, மணிகண்டன் திருமணம் செய்தார். புகாரில், தண்டராம்பட்டு போலீசார், மணிகண்டனை போக்சோவில் கைது செய்த நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்த வழக்கில், திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதி தாமோதரன், மணிகண்டனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

