செய்யாறில் 250 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா்.
திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன், அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்யாறில் பேருந்து நிலையம், லோகநாதன் தெரு, வாரச்சந்தை ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 கடைகளில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

