மும்பையில் பலத்த மழைக்கு இடையே தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா; பாதுகாப்பில் 16,000 போலீஸார்
மும்பையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே 12 நாட்கள் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகத் தொடங்கியது.
மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 முதல் 12 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த விழாவைக் காண வெளிநாட்டுப் பக்தர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மும்பைக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாகத் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விநாயகர் சிலைகளை பந்தல்களுக்கு எடுத்துச்சென்று பிரதிஷ்டை செய்வதில் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.


