மரவள்ளி கிழங்கு விலை உயர்வு டன் ரூ.15,500க்கு விற்பனை
ஈரோடு: மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உணவுக்கும், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களில் பயன்படுத்தவும், ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உற்பத்திக்கும் பயன்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மார்ச் முதல் மூன்று மாதங்கள் அறுவடை சீசனாகும். கடந்தாண்டும், இந்தாண்டும் மழை இன்மையால் உற்பத்தி, வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.

