மாணவர்களுக்கு வரவேற்பு விழா
தேனி:தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வான 100 மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரோகினி தேவி தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சிவகுமரன், ஏ.ஆர்.எம்.ஓ., ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் கல்வி கட்டமைப்பு, கட்டுப்பாடுகள், மாணவர்களின் எதிர்கால இலக்குகள் குறித்து முதல்வர் பேசினார். இதில் துணை முதல்வர் கவிதா, கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், டாக்டர்கள் பங்கேற்றனர்.
