வரலாற்றுச் சாதனை
இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கோட்டயம் அருகேயுள்ள அயமனம் கிராமத்தில் 1886 ஆகஸ்ட் 2-ஆம் தேதி பிறந்த இவர், மருத்துவத் துறையில் பல்வேறு தடைகளைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்டிலும், பின்னர் மகாராஜாஸ் கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர், 'கேரளாவின் முதல் பெண் பட்டதாரி' என்ற பெருமையைப் பெற்றார்.

