7 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா... டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு
சிட்னி,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லபுஷேனுக்கு தொடரும் வாய்ப்புசமீபத்தில்
சமீபத்தில் நடிந்து முடிந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படாதபோதிலும், மிடில்-ஆர்டர் பேட்டரான மார்னஸ் லபுஷேனை தேர்வாளர்கள் அணியில் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர்.
அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும், கூப்பர் கானலி, மேத்யூ குஹ்னெமேன் மற்றும் மைக்கேல் நெசர் ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



