இரண்டாக உடைந்தது சிஜேபி! உருவானது சிஜேபி-டி!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவு பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இருந்து விலகிய சமூக ஆர்வலர் மனிஷ் பிரம்மபத், ’கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம்’ என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ஜந்தர் - மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மனிஷ் பிரம்மபத் செயல்பட்டார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் சிஜேபியை பலப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவை கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

