குட்டையை மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, குட்டை மற்றும் அதன் நீர் வழித்தடத்தை மீட்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள கண்ணமநாயக்கனுாரில், 6.69 ஏக்கர் பரப்பளவில் செங்கண்ணன் குட்டை அமைந்துள்ளது. மழை காலங்களில், மழை நீர் இக்குட்டையில் தேங்கி, சுற்றுப்புறத்திலுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக உள்ளது.
இக்குட்டை மற்றும் நீர் வழித்தட ஓடையை தனியார் ஆக்கிரமித்துள்ளதால், குட்டை மாயமாகியுள்ளது. இக்குட்டையை மீட்க வேண்டும், என கடந்த, 9 ஆண்டுகளாக, மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், பயனில்லை.

