சர்வதேச விருது பெற்ற காங்., தலைவி கவிதா
- நமது நிருபர் - பெங்களூரின், பி.டி.எம்., லே - அவுட் சட்டசபை தொகுதியின், காங்கிரஸ் தலைவியும், சமூக சேவகியுமான
பெங்களூரின், பி.டி.எம்., லே - அவுட் சட்டசபை தொகுதியின், காங்கிரஸ் தலைவியும், சமூக சேவகியுமான கவிதா ஸ்ரீநாத்துக்கு, சர்வதேச அளவிலான, 'ஷி பார் தி நேஷன்' விருது கிடைத்துள்ளது. கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இலங்கை நாட்டில், 'எனி ஹெல்ப் குரூப்ஸ்' என்ற அமைப்பு சார்பில், ஷீ பார் தி நேஷன் என்ற விருது வழங்கப்படுகிறது. இது, சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதாகும். உலகம் முழுவதும் தொழில் முனைவோர், சமூக சேவை உட்பட, பல்வேறு துறைகளில் சாதனை செய்யும் பெண்களை அடையாளம் கண்டு, இந்த விருது வழங்கப்படுகிறது.
மிகவும் உயரிய விருதுக்கு, நடப்பாண்டு, பி.டி.எம்., லே - அவுட் காங்கிரஸ் தலைவியும், சமூக சேவகியுமான கவிதா ஸ்ரீநாத் தேர்வு செய்யபட்டுள்ளார்.


