விளக்கு இல்லாத மின் கம்பங்கள் இரவில் வாகன ஓட்டிகள் சிரமம்
திருவள்ளூர், செப். 5– திருவள்ளூர் – மணவாள நகரை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,
திருவள்ளூர் – மணவாள நகரை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், விளக்குகள் இல்லாத மின் கம்பங்களால் இருளில் மிதக்கிறது.
சென்னை, பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, அனைத்து வாகனங்களும் மணவாள நகர் வழியாக திருவள்ளூர் வருகின்றன.
இதற்காக, திருவள்ளூரை இணைக்கும் வகையில், மணவாள நகர் – பெரியகுப்பம் கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.



