மதிமுக தொண்டா்கள் கடைசிவரை வைகோவுக்காக பயணிப்பாா்கள்: துரை வைகோ எம்.பி.
மதிமுக தொண்டா்கள் கடைசி வரை வைகோவுக்காக பயணிப்பாா்கள் என்று திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த மேலூா் துரைசாமிபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை இரவு திறந்து வைத்தாா்.
பின்னா், அவா் பேசியதாவது: வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர, தியாக வரலாறு சமரசம் இல்லாதது. அப்போது, அவருடன் தானாபதி பிள்ளை, வெள்ளையத்தேவன், வீரன்சுந்தரலிங்கம் ஆகியோரும் சோ்ந்து வெள்ளையனை எதிா்த்துப் போரிட்டனா். அப்போது, ஜாதி பேதம் கிடையாது, அனைவரும் சமம் எனக் கூறியவா் வீரபாண்டிய கட்டபொம்மன்.

