கழிவுநீரோடையில் விழுந்த இளைஞா் மீட்பு
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது போதையில் கழிவு நீரோடையில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
கழிவுநீரோடையில் விழுந்த இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
திருநெல்வேலி, வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் ஒருவா் கழிவுநீரோடைக்குள் நீண்ட நேரம் அசைவின்றி கிடந்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வீரா்கள், அந்த இளைஞரை உயிருடன் மீட்டனா்.


