அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்!
An engineer from Maharashtra resigned from his job in the US and is now earning ₹30 lakh a year from drumstick farming.
மகாராஷ்டிரா எஞ்சினியர் ஒருவர் தனது அமெரிக்க வேலையை ராஜினாமா செய்து முருங்கை விவசாயத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் பலர் விவசாயத்தை நவீன முறையில் பெரிய அளவில் செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாடி என்ற இடத்தை சேர்ந்த சாகர் காரே என்ற மெக்கானிக்கல் எஞ்சினியர், படித்து முடித்து விட்டு, இரண்டு ஆண்டுகள் புனேயில் உள்ள அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால் இது தனக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்து 2018ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.
அங்கு அவரது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் தங்களது நிலத்தில் கரும்பு, கோதுமை மற்றும் பருப்பு வகைகளை பயிரிட்டு வந்தனர். அதோடு அவர்கள் ரசாயான உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும், வணிக ரீதியாக சாத்தியமாக்குவதற்கான வழிகளைத் சாகர் தேடத் தொடங்கினார்.


