புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா? - வேல்முருகன்
சென்னை, புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெ
புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாகக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதையும், தற்போதைய இடநெருக்கடி மற்றும் எதிர்கால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.
தமிழ் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு, பண்பாடு, அறிவு மற்றும் தமிழர்களின் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் செம்மொழியாகும். எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கான முழுமையான உரிமை நிலைநாட்டப்படுவது அவசியமானதாகும்.



