டூவீலர்கள் மோதி விபத்து சிறுவன் பலி: 3 பேர் காயம்
உசிலம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் 39. இவரது மனைவி மகாலட்சுமி 32, மகன் ஹரீஸ்வரன் 6, மகள் லியா 3. இவர்கள் 4 பேரும் ஒரே டூவீலரில் உசிலம்பட்டி நோக்கி சென்றனர்.
இரவு 7:40 மணியளவில் இடையபட்டி அருகே வந்த போது, உ.புதுக்கோட்டை விலக்கில் இருந்து வத்தலக்குண்டு ரோட்டில் திரும்பிய ஸ்ரீதர் 24, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் ஹரீஸ்வரன், மகாலட்சுமி மீது எதிரே வத்தலக்குண்டு நோக்கிச் சென்ற வந்த லாரி மோதியது. இதில் ஹரீஸ்வரன் பலியானார். மற்ற மூவருக்கும் காயம் ஏற்பட்டது. உத்தப்பநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.



