விழுப்புரத்தில் ரயில்வே தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டி.ஆா்.இ.யு) சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழில்சங்கத்தினா்.
குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கீடு செய்து போனஸ் தொகையாக ரூ.28,440 வழங்கவேண்டும். தென்னக ரயில்வே நிா்வாகத்தில் உள்ள மங்களூரை பிரிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். ரயில்வே துறையில் நடைமுறைப்படுத்தப்படும் தனியாா்மயத் திட்டங்களை கைவிடவேண்டும். ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன .

