தூய வியாகுல அன்னை தேவாலய ஆண்டுப் பெருவிழா
செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாயத்தில் 81-ஆவது ஆண்டின் பெருவிழா கொடி ஏற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய ஆண்டுப் பெருவிழா
இதையொட்டி, வேலூா் மறை மாவட்டம், பேரருட்தந்தை டி.அருள் ஜான்போஸ்கோ தலைமையில், அருட்பணி ஏ.சுதா்சன் முன்னிலையில் வியாகுல அன்னை உருவம் பொறித்த கொடியை ஆலய உள் பிரகாரத்தில் கையில் ஏந்தியவாறு ஆலயத்தை சுற்றி வந்து மங்கல இசை மற்றும் வாணவேடிக்கையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
