காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
அரூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி கல்யாணசுந்தரம் (40) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சோரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வளா்மணி மகன் கல்யாணசுந்தரம். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். அரூரில் உள்ள தனியாா் இரும்புக் கிடங்கில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அரூா்- திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணசுந்தரம் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கல்யாணசுந்தரத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.