தூத்துக்குடி: நில பிரச்சினையில் இரு கிராம மக்கள் மோதல்; 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய இரு கிராம மக்களுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு இடத்தில் கபடி விளையாடும் நிலம் தொடர்பாக
விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய இரு கிராம மக்களுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு இடத்தில் கபடி விளையாடும் நிலம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரிய அளவில் மோதலாக வெடித்தது. ஆத்திரமடைந்த இரு கிராம மக்களும் கற்களை வீசி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இந்த கல்வீச்சு சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.



