``டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ - முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த்
``ஒரு ஆட்சியாளராக தன்னுடைய கடமையை நிறைவேற்ற முதலமைச்சர் விஜய் தவறிவிட்டார் என்பது தான் என்னுடைய கருத்து.’’ - எம்.பி கதிர் ஆனந்த்.
வேலூர் எம்.பி-யும் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கதிர் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையும் ஸ்டிக்கர் ஒட்டி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவைகளையெல்லாம் கேள்வி கேட்டால் வசைபாடிவிட்டு சட்டசபையை கேலிக்கூத்தாக சினிமா கொட்டகைபோல மாற்றிவிட்டார்கள்.
மக்களுக்கு நலத் திட்டங்களைக் கொண்டு செல்வதில் எந்தவகையான பிடிமானமும் கிடையாது. ஒரு முதலமைச்சர் அரசாங்க பணத்தில் வெளிநாடு செல்கிறார் என்றால், உடனடியாக `பிரஸ்மீட்’ அழைத்து `எதற்காக செல்கிறேன். எந்த நோக்கத்துக்காக செல்கிறேன். அங்கு யாரையெல்லாம் பார்க்கவிருக்கிறேன்’ என்று தெரியப்படுத்த வேண்டும். அதுதான் வழக்கம். ஆனால், பிரஸ்மீட் கொடுக்கவில்லை. எந்த வகையான அறிக்கையும் கிடையாது.




