பெருந்துறையில் ஜெயக்குமார் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு : ஐகோர்ட் தள்ளுபடி
பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.
இதனிடையே, தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



