இலங்கையில் ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்: இருவர் கைது
ராமேஸ்வரம்: இலங்கையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த அந்நாட்டு போலீசார், தாய்லாந்து கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு இலங்கை கொழும்பு விமான நிலையத்திற்கு தாய்லாந்து விமானத்தில் வந்திறங்கிய இருவரை அந்நாட்டு சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அவர்களது பேக்கில் 4.5 கிலோ குஷ் மற்றும் 640 கிராம் ஹஷிஸ் எனும் போதை பொருள் இருந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.5 கோடி. இதையடுத்து தாய்லாந்து கடத்தல்காரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


