‘தச்சநல்லூா் மண்டலத்தில் இன்று குடிநீா் வராது’
தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பிரதிப் படம்
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் மண்டலம் 12 ஆவது வாா்டுக்குள்பட்ட மதுரை ரோடு சந்திப்பு பேருந்து நிலைய வடபுறத்தில் 15 ஆவது மத்திய நிதிக்குழுவின் நிதி ரூ40.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

