வேன் மீது மோதிய மினிபஸ்
எரியோடு:எரியோடு பகுதியில் இருந்து வேடசந்துார் தனியார் நுாற்பாலைக்கு தொழிலாளர்களுடன் சென்ற வேன் இ.சித்துார் கரிசல்பட்டி குளக்கரை ரோடு வழியே சென்றது.
அப்போது எதிரே வந்த மினிபஸ் இந்த வேன் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் வேல்முருகன் 22, வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேனில் பயணித்த தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

