'24 காரட் தங்க பிளேட், 3.8 லட்சம் அமெரிக்க வைரங்கள்' - பக்தர்களைக் கவரும் ஐதராபாத் விநாயகர்
ஐதராபாத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயர் சிலை 24 காரட் தங்க பிளேட், 3.8 லட்சம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகத் தொடங்கியது. இதையடுத்து மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் தினமும் பூஜை செய்து வருகின்றனர்.
மும்பையில் மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் இந்த விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பேகம் பஜாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அங்குள்ள லிச்சி பேர்ல் செட் ஜூவல்ஸ் என்ற நகைக்கடையில்தான் இந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

