கைப்பந்து அணி வீராங்கனைகள் தேர்வு
சின்னாளபட்டி: பள்ளிகளுக்கான மண்டல கைப்பந்து போட்டிகளில் பங்கேற்கும் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட அணி வீராங்கனைகள் தேர்வு சின்னாளபட்டியில் நடந்தது.
சேரன் வித்யாலயா பள்ளியில் நடந்த தேர்வு போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரகமத்கனி தலைமை வகித்தார்.


